தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர், புரெவி பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - உழவர்கள் சாலை மறியல் - farmers protest seeking relief for burevi and nivar

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா பழையபாளையம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வலியுறுத்தி அப்பகுதி உழவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

farmers protest seeking relief for burevi
farmers protest seeking relief for burevi

By

Published : Feb 24, 2021, 8:14 AM IST

நிவர், புரெவி புயல் வெள்ளத்தில் மூழ்கி உழவர்களின் பயிர்கள் அனைத்தும் சேதமாகின. இதற்கு அரசு நிவராணத் தொகை அறிவித்தது. ஆனால் இதுநாள் வரை தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனவும், அலட்சியமாகச் செயல்படும் அலுவலர்களைக் கண்டித்து நிவாரணத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் பழையபாளைய கிராம உழவர்கள் பழையபாளைம் வேளாண் கூட்டுறவுச் சங்கம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து வேளாண் துறை அலுவலர்கள், வட்டாட்சியர் உழவர்களிடம் விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு உழவர்கள் கலைந்துசென்றனர். போராட்டம் காரணமாக சிதம்பரம் பழையார் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க :நிவர், புரெவி புயல்களின் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details