தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் போராட்டம்! - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலையில் அமர்ந்து போராடிய விவசாயிகள் தொடர்பான கானொலி
சாலையில் அமர்ந்து போராடிய விவசாயிகள் தொடர்பான கானொலி

By

Published : Aug 25, 2021, 7:42 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுக்கா குளிச்சார் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நெல் அறுவடைப் பருவத்தில் திறக்கப்படும் இந்த நெல் கொள்முதல் நிலையம், கடந்த சம்பா பருவம் வரை செயல்பட்டு வந்தது.

தற்போது குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கழனிவாசலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு, நெல்மணிகளை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சாலையில் அமர்ந்து போராடிய விவசாயிகள் தொடர்பான கானொலி

சாலையில் அமர்ந்து போராடிய விவசாயிகள்

இதன் காரணமாக குளிச்சார், இளையாளூர், மன்னம்பந்தல், செருதியூர் உள்ளிட்ட 5 கிராம மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அறுவடை செய்த நெற்கதிர்களுடன் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள மன்னம்பந்தல் கடைவீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவலர்கள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ரேசன் பொருள்களை கடத்தினால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details