நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழபொதுனூர், கண்ணமங்கலம், பிற்கொடி, கங்களாஞ்சேரி, புதுக்கடை, ஏர்வாடி, விச்சூர், பெரிய கண்ணமங்கலம் ஆகிய எட்டுக் கிராமங்களுக்கு 2017- 18ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையினை பயிர் பாதிப்பு இல்லை எனத் தவறுதலாக கணக்குக் காட்டி இன்சூரன்ஸ் நிறுவனம் நிவாரணத் தொகையினை வழங்கவில்லை என்றும், அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எட்டுக் கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருமருகல் பேருந்து நிறுத்தம் அருகே நாகப்பட்டினம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடமும், நாகை வட்டாட்சியர் சங்கரிடமும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.