கஜா புயல், நிவர் மற்றும் புரெவி புயல்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீடுகள் மட்டுமின்றி விவசாயிகளும் கடும் பாதிப்பை சந்தித்தனர். ஆனால், இதுவரை புயல் பாதிப்புகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் முறாயாக வழங்கவில்லை.
இந்நிலையில், நிவாரணம் வழங்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து மேலப்பிடாகையில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது புயலால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.