மயிலாடுதுறை : சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று (நவ.26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கவேண்டும், வேலை இழந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 வழங்கவேண்டும், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வழங்கவேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விளைநிலங்களுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை 100% முழுமையாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.