குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், தண்ணீர் திறப்பில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், 'முதலமைச்சர் குறிப்பிட்டது போல் ஜுன் 12ஆம் தேதி, காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டால், கரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும்' என நம்பிக்கைத் தெரிவித்தனர்.