நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதிவாணன் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.
வாட்ஸ்ஆப்பில் மூழ்கிய அரசு அலுவலர்கள் அப்போது விவசாயிகள் ஆதங்கத்துடன் தங்களது குறைகளை கூறி கொண்டிருந்த வேளையில், அரசு அலுவலர்கள் அலட்சியமாக வாட்ஸ் ஆப்பில் பொழுதை கழித்தனர். மேலும் சிலர் செல்ஃபோனில் பேசியபடி இருந்தனர்.
இதையும் படிங்க:நான்கு அரசு அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு