தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி நீருக்கு பூஜை செய்து மலர்த்தூவி வரவேற்ற விவசாயிகள்..!

மேட்டூரில் இருந்து திறக்கபட்ட காவிரி நீர், சீர்காழி அருகே மேலையூரில் உள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுப்பணிதுறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்த்தூவி வணங்கி வரவேற்றனர்.

காவிரி நீரை பூஜை செய்து மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்
காவிரி நீரை பூஜை செய்து மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

By

Published : Jun 2, 2022, 10:13 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம், குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல்லாயிரம் மையில்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மேலையூரில் உள்ள இந்தக் கடைசி கதவணை வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.

ஒவ்வொரு வருடமும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இந்தக் கடைசி கதவனையை வந்தடையும். அவ்வாறு இந்த ஆண்டு மேட்டூரில் கடந்த 24ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் 10 நாட்களில் இக்கதவணையை இன்று(ஜூன்02) வந்தடைந்தது.

கதவணை வந்தடைந்த காவிரி தண்ணீரை பொதுப்பணிதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் படையலிட்டும் மலர்த்தூவியும் வணங்கி வரவேற்றனர். இக்கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

தண்ணீர் வந்தடைந்தது குறித்து விவசாயிகள் கூறுகையில்,’கடந்த ஆண்டு உரிய நேரத்தில் காவிரி தண்ணீர் வந்து சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 20 நாட்களுக்கு முன்னரே கிடைத்துள்ளதால் மகிழ்சியோடு கூடுதல் பரப்பளவில் சாகுபடியை தொடங்குவோம்’ எனத் தெரிவித்தனர். அதே நேரம் முறைவைக்காமல் தண்ணீரைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி நீரை பூஜை செய்து மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

இதையும் படிங்க:காவிரி புஷ்கர துலாக் கட்டத்திற்கு வந்த காவிரித்தாய் - மலர்த்தூவி வரவேற்ற மண்ணின் மைந்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details