நாகை மாவட்டம், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இரண்டு விவசாயிகள் சுயேட்சைகளாக வேட்புமனுத் தாக்கல் செய்தனர். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளை தடை செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று அச்சிடப்பட்டிருந்த பதாகைகளையும், காலி மதுபாட்டில்களையும் கழுத்தில் அணிந்தும், மண் சட்டியை கையில் ஏந்தியவாறும் வந்து மயிலாடுதுறை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.
மதுப்பாட்டில் மாலை... கையில் மண் சட்டி..! - நாகை தொகுதி வேட்பு மனுத்தாக்கலில் ருசிகரம்! - மயிலாடுதுறை
நாகை: டாஸ்மாக் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கண்டித்து, மது பாட்டில்களை மாலையாக அணிந்து, கையில் மண் சட்டி ஏந்தியபடி விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத்தாக்கல்
மேலும் தங்கள் அமைப்பு சார்பில் இந்த தேர்தலில் மயிலாடுதுறையில் மட்டும் நூறு பேர் போட்டியிட உள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் விரைவில் வேட்புமனுவினை தாக்கல் செய்வார்கள் என்றும் அதிரச் செய்தனர்.