தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரின்றி கருகும் பயிர்கள் - வாய்க்காலில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால், வாய்க்காலில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

farmers
farmers

By

Published : Nov 4, 2020, 12:16 PM IST

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சி பனம்பள்ளிக் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் உளுத்துக்குப்பை-மொழையூர் பாசன வாய்க்காலை நம்பி 50 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்க்கால் முறையாக தூர் வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகளாலும் பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாசன வாய்க்காலை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகாமையில் உள்ள பூவேந்தன் வாய்க்காலில் செல்லும் தண்ணீரை மடை அடைத்தும், வாடகைக்கு போர்வெல் மூலம் தண்ணீர் கொண்டு வந்தும் சம்பா நடவு செய்தனர். தற்போது சம்பா நடவு செய்து 30 நாள்கள் ஆன நிலையில் வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததால் வளர்ந்து வரும் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.

தண்ணீரின்றி கருகும் பயிர்கள்

இதனால், பொதுப்பணித்துறை உடனடியாக பூவேந்தன் வாய்க்காலுக்குத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுத்துக்குப்பை-மொழையூர் பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மலை ரயில் பாதையில் விலங்குகளை கண்காணிக்கும் கேமரா!

ABOUT THE AUTHOR

...view details