தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை - Farmers' demand for speedy Citizenship works

நாகை: காவிரி நீர் கடைமடை பகுதியில் தடம் பதிக்க, தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை

By

Published : May 23, 2020, 6:47 PM IST

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, குருவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குருவை சாகுபடிக்காக சிறப்பு விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள், "காவிரி நீர் கடைமடை பகுதியில் தடம் பதிக்க, தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கூடுதலான விலைக்கு உரம் விற்பதை தடுத்து, ஒரு லட்சம் மூட்டை யூரியா உள்ளிட்ட இடு பொருட்களை தட்டுப்பாடின்றி விவசாயத்திற்கு வழங்க வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் சேலம் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details