தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயத்திற்கான ஒரே நீர் ஆதாரம் காவிரி நீர்.
அதுமட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு குடிநீர் வாழ்வாதாரமாகத் திகழும் காவிரிநீர் உரிமையைப் பெறுவதற்காக, கடந்த பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின், மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதன் தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக அதற்கான ஆய்வுப் பணி நடைபெற்றுவந்தது.
விவசாய நிலத்தில் ஏற்றப்பட்டுள்ள கறுப்புக் கொடி இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகார செயல்பாடுகளை முடக்கும்விதமாக மத்திய அரசு நீர் ஆற்றல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கொண்டுவருவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நிலத்தில் கறுப்புக் கொடி நடும் விவசாயிகள் இதனால், கொந்தளிப்பு அடைந்த டெல்டா விவசாயிகள் உடனடியாக மத்திய அரசு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்ததோடு, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் இந்தப் புதிய உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஊரடங்கு தடை உத்தரவையும் மீறி, இன்று நாகையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் பருத்தி நடவுசெய்யப்பட்ட வயலில் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் கறுப்புக் கொடி நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இன்று நாகையில் விவசாயிகள் வயல்களில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கை மீறி கருப்பு கொடி ஏற்றி போராடிய விவசாயிகள்! இதையும் பார்க்க:இந்தியாவுக்கு விவசாயிகளால் பெருமை: பிரதமர் மோடி