தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் கனமழை...வயலில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை - Crop farming

தொடர் கனமழையால் வயலில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 3, 2022, 10:47 PM IST

மயிலாடுதுறை: முட்டம், அகரகீரங்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 350 ஏக்கர் குறுவை விவசாயம் நடப்பாண்டில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கீழ் அடுக்கு சுழற்சியால் தொடர்ந்து மழை தற்போது பெய்து வருகிறது.

அதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 200க்கும் மேற்பட்ட நெற்பயிர்கள், கடந்த 11 நாட்களாக பெய்த தொடர் மழையால் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி நெற்கதிர்கள் முளைவிட்டுள்ளன. தண்ணீரை வடியவைக்க விவசாயிகள் வயலிலேயே வாய்க்கால் தோண்டும் நிலைக்கு ஆளானதால் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.

தொடர் கனமழையால் வயலில் சாய்ந்த நெட்கதிர்கள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை

மேலும், வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், உயர் அதிகாரிகள் வந்து பார்வையிடாமல் கிடைமட்ட அதிகாரிகளே வந்து பார்த்து சென்றுள்ளதாகவும், இதுவரை சரியாக கணக்கெடுத்து அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும், உடனடியாக விவசாய துறை அதிகாரிகள் பார்வையிட்டு, சேதமதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தி, பயிர் இழப்பீடு பெற்று தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க:'பாஜக நிதி கொடுத்த வாங்கிங்க... எங்களுக்காக வந்து வேலைபாருங்க' - குஜராத்தில் பாஜகவினருக்கு அழைப்புவிடுத்த கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details