தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருத்தி கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

சீர்காழி அருகே பருத்தி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தி கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
பருத்தி கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

By

Published : Jul 13, 2022, 2:25 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி நேற்று(ஜூலை 12) ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் அரசு ஒரு குவிண்டாலிற்கு நிர்ணயத்த ரூ.6025 விலையை விட மிக குறைவாக குவிண்டாலுக்கு ரூ. 4010, மற்றும் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இரவு, பகலாக கண்விழித்து ஏல விற்பனைக்காக காத்திருந்த விவசாயிகள் ஆத்திரம் அடைந்து பருத்தி ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகளை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நிர்ணயித்த விலையை நிர்ணயிக்கக் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் மற்றும் கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் வரும் வாரங்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும், பகல் நேரத்தில் ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பருத்தி விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

பருத்தி கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

இதையும் படிங்க:உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்; மயிலாடுதுறை விவசாயி மகள் சாதனை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details