நாகை மாவட்டம், சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்; விவசாயி. இவர் குடும்பத்துடன் நேற்று மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பன் உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சோறு போடும் விவசாயி வீட்டில் 'கை' வரிசை காட்டிய கொள்ளையர்கள்! - nagappatinam
நாகை: சீர்காழி அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விவசாயி வீட்டில் 2 லட்சம் ரொக்கம் கொள்ளை
விவசாயி வீட்டில் 2 லட்சம் ரொக்கம் கொள்ளை
பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணம், 6 சவரன் தங்க நகை, செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து, மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.