கடந்த மாதம் 6ஆம் தேதி மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயில் யானை ’அபயாம்பிகை’ இந்து சமய அறநிலையத்துறை, மாயூரநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடந்த இந்தப் புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் வலம் வந்த யானை, முகாம் நிறைவடைந்து இன்று (மார்ச் 28) அதிகாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு மீண்டும் வந்தடைந்தது.
கோயிலுக்கு வந்த யானைக்கு இந்து அறநிலையத்துறை மயிலாடுதுறை ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டன. அப்போது, கோயிலுக்கு வந்த அபயாம்பிகை யானையை வரவேற்று நாய் ஒன்று சுற்றி சுற்றி வந்தது. கோயில் வாசலில் இறக்கி விடப்பட்டு கோயில் உள்ளே சென்ற யானையின் பின்னால் சென்றது. யானைக்கு பூஜை செய்த போதும் யானையை சுற்றியே வலம் வந்து உற்சாகமடைந்து.