இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆற்காட்டு துறையை சேர்ந்த மீனவர் சிவக்குமாரை முன்னாள் அமைச்சரும், நாகை அதிமுக மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், சிவகுமாருக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு
தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்த மாநில அரசு குரல் கொடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "இலங்கை கடற் கொள்ளையர்களால் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதி மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் நடைபெறாமல் இருந்தது.
ஆனால் ஒரு மாதமாக மீனவர்களின் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது. மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மாநில அரசு குரல் கொடுக்கவில்லை. எனவே மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி அவர்களை பாதுகாக்க மத்திய அரசிடம் மாநில அரசு அழுத்தம் தர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர்