கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உலக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளதால், வாகன பயன்பாடு என்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோலியம் பயன்பாடு என்பது வெகுவாக குறைந்ததால், பெட்ரோலிய உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் பீப்பாய்க்கு சுமார் 10 டாலர் அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலையை குறைத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்யை சேமிக்க முடியாததால், கச்சா எண்ணெய்யின் விலை அங்கு மைனஸ் - 39 டாலருக்கு விற்பனை ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆனால், இந்தியாவில் அதன் விலை இன்னும் குறையாமல் இருப்பது ஏன்?. அமெரிக்காவால் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தவும் முடியாமல், குறிப்பிட்ட அளவிற்கு மேல் சேமிக்கவும் முடியாததால், விலை வீழ்ச்சிக்கு பிறகும் இலவசமாக மல்லுக்கட்டி மானியத்தோடு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.