தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் அடைப்பு - கடைகள் அடைப்பு

நாகப்பட்டினம்: கரோனா அச்சம் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

maintaining social distancing
nagapatttinam Essential Shops closed

By

Published : Apr 16, 2020, 6:53 PM IST

உலகம் முழுவதும் கரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 38 நபர்களுக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டம் முழுவதும் கரோனா நோய் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக செயல்பட்டு வந்தன. ஆனால், ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருள்களான மளிகை, காய்கறி உள்ளிட்டவந்நை விற்பனை செய்யும் கடைகள் காலை முதல் மதியம் 1 மணி வரை இயங்கி வந்தன.

இதனால் பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, காரைப்பிடாகை, சிந்தாமணி, மேல பிடாகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அத்தியாவசிய பொருள்களை மக்கள் வாங்கிச் சென்றனர். தற்போது பரவும் கரோனா நோய் தொற்றை பற்றி கவலையின்றி மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடைகள் அடைப்பு

இதனை அடுத்து நோய் பரவலைத் தடுக்கும் விதமாக இப்பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கள், ஊரடங்கு உத்தரவு முடியும்வரை முழுவதுமாக கடைகளை அடைக்க முடிவெடுத்துள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வழியின்றி அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதையும் படிங்க:ரத்தத் சொட்ட மதுவை கொள்ளையடித்த மது வெறியன்

ABOUT THE AUTHOR

...view details