தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த வீரருக்கு உற்சாக வரவேற்பு!

மயிலாடுதுறை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று, சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கும் தகுதிபெற்று சொந்த ஊர் திரும்பிய விளையாட்டு வீரருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

enthusiastic-welcome-to-the-player-achieved-in-the-national-games
enthusiastic-welcome-to-the-player-achieved-in-the-national-games

By

Published : Feb 4, 2021, 8:35 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஏரவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ஆல்ட்ரின் ஆம்ஸ்ட்ராங் (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

இவர் கடந்த ஜனவரி 29, 30 ஆகிய இரண்டு நாள்கள் கோவாவில் நடைபெற்ற 'நேஷனல் பெடரேஷன் கப் 2020-2021' என்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார்.

இதில் நீச்சல் போட்டியின் 100 மீட்டர் பிரிவு, ஈட்டி எறிதல் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன்மூலம் பிப்ரவரி 24ஆம் தேதி நேபாளில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தேசிய அளவிலான போட்டிகளில் வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய வீரர் ஆல்ட்ரின் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து, விளையாட்டு வீரர் ஆல்ட்ரின் ஆம்ஸ்ட்ராங் கூறும்போது, “சிறுவயது முதல் நீச்சல், ஈட்டி எறிதல் போட்டிகளில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஏரவாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊர் பொதுக்குளத்தைச் சுத்தம்செய்து, அங்கு நீச்சல் பயிற்சி பெற்றுவந்தேன்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த வீரருக்கு உற்சாக வரவேற்பு

கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கவும், அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: ஈஸ்ட் பெங்காலைப் பந்தாடிய பெங்களூரு எஃப்சி

ABOUT THE AUTHOR

...view details