நாகப்பட்டினம்:சம்பா சாகுபடி முடிந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாக புகார் இருந்து வருகிறது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமாபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் பாஸ்கர், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தெற்கு பொய்கை நல்லூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி இளங்கோ என்பவர் தன்னுடைய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு நிலையம் சென்றுள்ளார். அவரிடம் இருந்த 48 மூட்டைகளை கொள்முதல் செய்த நிலையத்தின் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் உள்ளிட்ட ஊழியர்கள், மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் என ஆயிரத்து 940 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.