தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் எமன் சம்ஹார நிகழ்ச்சி! - eman samharam

நாகை: திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகையில் எமன் சம்ஹார நிகழ்ச்சி!

By

Published : Apr 16, 2019, 12:42 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் வரலாற்று புகழ் பெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கால சம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீர நடனம் புரிதல் நிகழ்வு, பின்னர் எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்வு, இதைத்தொடர்ந்து எமனை இறைவன் சம்ஹாரம் செய்ய முயற்சிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன.

நாகையில் எமன் சம்ஹார நிகழ்ச்சி!

இந்நிகழ்சியில் தருமபுரி ஆதின இளைய மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details