தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி நான்கு சினைப்பசு மாடுகள் உயிரிழப்பு! - Nagai Latest News

நாகை: திருவிடைக்கழி கிராமத்தில் மரக்கிளை உடைந்து சாய்ந்ததால் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி நான்கு சினை பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

Electricity strikes and kills four cows
Electricity strikes and kills four cows

By

Published : Aug 17, 2020, 3:52 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி கிராமத்தில் கடலி ஆற்றங்கரை ஓரம் சுப்பையன் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது.

இந்த வயலில் திருவிடைக்கழி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான இரண்டு சினை பசுமாடுகள், விவசாயி சந்திரகாசன் என்பவருக்கு சொந்தமான இரண்டு சினை பசுமாடுகள் வயலில் மேய்ந்துகொண்டிருந்தன.

அப்போது வயலுக்கு மேலே சென்ற மின்கம்பி மீது மரக்கிளை சாய்ந்து விழுந்ததில் மின் கம்பி அறுந்து பசுமாடுகளின் மேல் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் நான்கு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் கோமதி, பொறையாறு காவல்துறையினர், காவல் ஆய்வாளர் செல்வம், இளநிலைப் பொறியாளர் எழில்ராஜ் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details