தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரைக்காலில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்காலில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் துறை தனியார் மயமாக்கல்  காரைக்காலில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம்!  மின் ஊழியர்கள்  மின் ஊழியர்கள் ஆர்பாட்டம்  Electricity Employees Protest In Karaikal  Electricity Employees Protest  Electricity Employees  The privatization of the Electrical Department
Electricity Employees Protest

By

Published : May 20, 2020, 4:01 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மின்துறை அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள தலைமை மின்துறை அலுவலகத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள், மத்திய அரசின் தனியார் மயமாக்குவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது என்றும், மாநில அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:மின் துறை தனியார் மயமாக்கல்; அரசின் முடிவென்ன? - எகிறும் எம்எல்ஏ

ABOUT THE AUTHOR

...view details