தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த இருப்பதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், வாக்குச்சாவடியில் பணியாற்றும் தேர்தல் நடத்தும்உதவிஅலுவலர்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகளை எவ்வாறு கையாளுவது குறித்த பல்வேறு பயிற்சிகள் நாகை தனியார் கல்லூரியில் இன்று அளிக்கப்பட்டது. உயர் அலுவலர்கள் ஆர்வத்துடன் பயிற்சியளித்துக் கொண்டிருந்தபோது, கண்டுகொள்ளாமல் பயிற்சியில் கலந்துகொண்ட தேர்தல் அலுவலர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்போன்களில் சினிமா படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
மேலும், காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு சுவாரஸ்யமாக பாடல் கேட்டுக்கொண்டும் வாட்ஸ்அப்பில் மூழ்கியபடியும் போன் பேசிக்கொண்டும் பயிற்சியை கவனிக்காமல் இருந்த சம்பவம் அங்கிருந்த உயர் அலுவலர்களை முகம் சுளிக்கவைத்தது.