தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூறு சதவீத வாக்குப்பதிவு: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாகை: நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நூறு சதவீத வாக்குப்பதிவு: கையெழுத்திட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்!

By

Published : Apr 1, 2019, 3:55 PM IST

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்தும் விதமாக, தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடையே பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலருமான சுரேஷ்குமார் நூறு சதவிகித வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து விதமாக, ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்று உறுதி ஏற்று, கையெழுத்திடும் நிகழ்வினை துவங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலதரப்பட்ட வாக்காளர்கள் தாங்கள் தவறாமல் வாக்களிக்க உறுதி ஏற்று கையெழுத்திட்டுச் சென்றனர்.

நூறு சதவீத வாக்குப்பதிவு: கையெழுத்திட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்!

ABOUT THE AUTHOR

...view details