தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் தேர்தல் ஒத்திவைப்பு! - 19 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காலமானதால் தேர்தல் ஒத்திவைப்பு

மயிலாடுதுறையில் 19ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காலமானதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காலமானதால் தேர்தல் ஒத்திவைப்பு
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காலமானதால் தேர்தல் ஒத்திவைப்பு

By

Published : Feb 12, 2022, 8:12 PM IST

நாகப்பட்டினம்:மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் 19ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மயிலாடுதுறை தருமபுரம் சாலையைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி அன்னதாட்சி (64) என்பவர் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.

இதனையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்ததால், மயிலாடுதுறை நகராட்சி 19ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் விதி 34(1)(C) தமிழ்நாடு நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சித் தேர்தல்கள் 2006 விதிகளின்படி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பாலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாத்தே நடிகை பரப்புரை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details