தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மயிலாடுதுறை கால் டாக்ஸி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களை ஒப்படைத்து வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பிறகே பொருள்கள் ஒப்படைக்கப்படும்.