தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு: கையெழுத்து இயக்கம் தொடக்கம்! - கையெழுத்து இயக்கம்
மயிலாடுதுறை: பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து பிரச்சார இயக்கம் நடைப்பெற்றது.
![வாக்காளர்களிடையே விழிப்புணர்வு: கையெழுத்து இயக்கம் தொடக்கம்! election](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10853180-897-10853180-1614768057652.jpg)
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத் தலைமை அஞ்சலகம் முன்பு நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை வகித்து முதல் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். இதில், கோட்டாட்சியர் பாலாஜி, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, தனித்துணை ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வாசுதேவன் கலந்துகொண்டு, முதல் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். இதில், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் செல்வகணபதி சீனிவாசன் தரங்கம்பாடி வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்ட திரளான பொதுமக்களும், கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.