நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மீன் வியாபாரி அருள்சாமி (70), அவரது மனைவி பாக்கியவதி (65) தம்பதியினர். இவர்களது இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி, ஒருவர் சென்னையிலும், இன்னொருவர் நாகை மாவட்டத்திலும் வசித்து வருகின்றனர்.
வயதான தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை - காவல் துறை விசாரணை! - காவல்துறை விசாரணை
நாகை: சீர்காழி அருகே வயதான தம்பதியினர் மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
வயதான தங்களது பெற்றோரை அவரது மகள்கள் அவ்வபோது சந்தித்து வந்தனர். இந்நிலையில் தம்பதியர் இருவரும், ரத்த அழுத்தம் , நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் கரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்காடு காவல் துறையினர், தம்பதியரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரனை மேற்கொண்டுள்ளனர்.