மயிலாடுதுறை:திருவாளப்புத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ புற்றடி மாரியம்மன், ஸ்ரீ பிடாரி, ஸ்ரீ காளியம்மன் கோயில் உள்ளிட்ட 8 கோயில்களில் இன்று (ஜூன் 13) அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 11ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து இன்று காலை மஹா தீபாராதனை செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜைசெய்யப்பட்ட புனித தீர்த்த கலசங்களை மேள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் எடுத்துச்சென்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு எட்டு கோயில்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.