தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தரிக்காய் முத்தினால்.. பழமொழி சொல்லி அதிமுக ஊழல் குறித்து பேசிய தினகரன் - TTV

கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும் என அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக ஊழல் குறித்து டிடிவி பேச்சு
அதிமுக ஊழல் குறித்து டிடிவி பேச்சு

By

Published : Nov 23, 2022, 5:48 PM IST

மயிலாடுதுறை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நட்சத்திர ரீதியாக தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் குடும்பத்தினருடன் உக்ர ரத சாந்தி ஹோமங்கள் செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து புகழ்பெற்ற தருமபுர ஆதீனத்தில் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசிபெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியதாவது, 'அதிமுக கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் கட்சியும், சின்னமும் இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் அதிமுக கட்சி பற்றி பேசுவது தேவையற்றது, சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது பற்றி எனக்குத் தெரியாது.

மத்தியில் அறிவிக்கப்படுகின்ற பிரதமர் வேட்பாளர் பொறுத்து டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். திமுக ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சந்தித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் மோசமான நிலையைச் சந்திப்பார்கள், மேலும் வருகின்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும்.

மழை வெள்ளப்பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது திமுக விடியல் ஆட்சியின் அவலங்கள் ஆகும். அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டியதில் ஊழல் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால் தான் திமுகவிற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

எந்த ஊழலாக இருந்தாலும் கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. நியாயமான கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்’ என்றார்.

அதிமுக ஊழல் குறித்து டிடிவி தினகரன் பேச்சு

திமுக அமைச்சர்கள் மத்தியில் சண்டை உள்ளதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில், ’முதலமைச்சர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்கள் இடையே சண்டை ஏற்படுகிறது, இதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம்’ என்றார்.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 - அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details