தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மீனவர்களை மீட்கக்கோரி எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்! - முக்கிய செய்திகள்

சென்னை: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீனவர்கள் ஒன்பது பேர் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க உதவி கோரி எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்
எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்!

By

Published : May 20, 2021, 3:49 PM IST

மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ”நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், இன்று வரை எவரும் கரை திரும்பவில்லை.

எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்

இவர்கள் அனைவரும் டவ்-தே புயலில் சிக்கியிருக்கலாம் என அவர்களது உறவினர்களும் சக மீனவர்களும் சந்தேகிக்கின்றனர். எனவே இந்தியக் கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் உதவியுடன் மீனவர்களை மீட்கும் பணிகளை உடனடியாக முடுக்கிவிடும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழினப்படுகொலை நாள்: வீடுகளிலேயே வீரவணக்கம் செலுத்த பழ. நெடுமாறன் வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details