தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியாளர் மீது போலி பாலியல் குற்றச்சாட்டு? - பெண் ஊழியருக்கு எதிராகப் போராட்டம் - Mayiladuthirai news

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் மீதான கைம்பெண் ஊழியரின் பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண் ஊழியருக்கு எதிராகப் போராட்டம்
பெண் ஊழியருக்கு எதிராகப் போராட்டம்

By

Published : Aug 7, 2021, 7:52 AM IST

மயிலாடுதுறை மின்வாரியத்தில் மின்சார உதவியாளராகப் பணியாற்றிவந்த கார்த்திகேயன் என்பவர் 2012ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி பணியில் இருக்கும்போது உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவி ஜெயலட்சுமிக்கு கருணை அடிப்படையில் மின்வாரியத்தில் பணி கிடைத்தது.

இந்நிலையில் மின்வாரிய செயற்பொறியாளராகப் பணியாற்றிவரும் முத்துக்குமார் என்பவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசி தகாத செயல்களில் ஈடுபட்டதாக ஜெயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டுவரும் செயற்பொறியாளர் முத்துக்குமாரை கைதுசெய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அண்மையில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேவேளை, பெண் ஊழியர் ஜெயலட்சுமி இன்டஸ் என்ற செல்போன் டவர் நிறுவனம் மின்கட்டணத் தொகைத் தொகையைச் செலுத்தியதில், பெண் ஊழியர் இரண்டு மாதங்களில் ரூ.9,10,366 கையாடல் செய்ததாகவும், இது தொடர்பான விசாரணையைத் திசைதிருப்பவே பொய்யாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் கூறப்படுகிறது.

போலி புகாருக்கு எதிராக மயிலாடுதுறை கோட்ட மின்வாரியத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் இணைந்து, அனைத்து தொழிற்சங்க மகளிர் கூட்டமைப்பு சார்பில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் குற்றமற்றவர் என்றும் கையாடலில் ஈடுபட்டதோடு, பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்த பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடிக்கு பிரெஸ்டீஜ் தலைவர் ரூ.10 கோடி நன்கொடை!

ABOUT THE AUTHOR

...view details