உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு உயிர்ப்பு பெருநாளை ஈஸ்டர் திருநாளாக இன்று (ஏப்.21) கொண்டாடுகிறார்கள். இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை - புனித ஆரோக்கிய மாதா பேராலயம்
நாகை: புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
புனித ஆரோக்கிய மாதா பேராலயம்
இதில், பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்திய படி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிறப்பு திருப்பலியின் தொடக்கமாக இயேசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது. பாஸ்கா ஒளியை தேவாலயத்தின் நிர்வாகி பிரபாகர் ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.