இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை இன்று(ஏப்.12) உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். ஆனால் கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்து வருவதால், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயிலில் பக்தர்கள் கூட்டமின்றி ஈஸ்டர் திருநாள் விழா களையிழந்தது.
வேளாங்கண்ணியில் பக்தர்களின்றி ஈஸ்டர் திருப்பலி - கரோனா அச்சம்
நாகப்பட்டினம்: உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின்றி ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Easter
களையிழந்த வேளங்கண்ணி பேராலயம்
பூட்டியிருந்த மாதா கோயிலில் பக்தர்கள் இல்லாமல் 3 பங்கு தந்தையர்கள் மட்டுமே பங்குபெற்ற நள்ளிரவு ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்று கொண்டிருக்கும்போதே இயேசு உயிர்த்தெழுந்ததை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது.