மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த கோயிலில் மட்டுமே ஆயுஷ் ஹோமம், மணிவிழா யாக பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு வந்து நேற்று(பிப்.21) சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் அபிராமி அம்மன் படம் மற்றும் கோயில் பிரசாதம் வழங்கினர்.
முன்னதாக கட்சி பிரமுகர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோபூஜை, கஜபூஜை, செய்து வழிபட்டார். பின்னர் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் தரிசனம் செய்தார்.