தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் தொடரும் பாதாளச் சாக்கடைப் பள்ளங்கள்! - underground drainage problem in nagai

நாகப்பட்டினம்: கீழ நாஞ்சில்நாடு பம்பிங் நிலையம் அருகே மண்சரிவால் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாதாள சாக்கடை பள்ளம், பொதுமக்கள் அச்சம், road damaged in nagai, underground drainage problem in nagai
மயிலாடுதுறையில் தொடரும் பாதாளச் சாக்கடைப் பள்ளங்கள்

By

Published : Jan 20, 2020, 9:37 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில், 15 ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் சேகரிக்கப்படும் கழிவு நீர்கள் அனைத்தும் பிரதான குழாய் வழியாக, ஆறுபாதி பகுதியிலுள்ளச் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.

கழிவுநீர் தடையின்றிச் செல்வதற்காக 10 இடங்களில் பம்பிங் நிலையம் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஒருமுறை பம்பிங் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை - தரங்கம்பாடிச் சாலையில் பாதாளச் சாக்கடைக் கழிவு நீர் செல்லும் குழாயில், இரண்டு வருடங்களாக கச்சேரி சாலை, சின்ன கடை வீதி, புதுத்தெரு, கொத்தத்தெரு என்று இதுவரை 14 இடங்களில் பாதாளச் சாக்கடைக் குழாய் உடைப்பு ஏற்பட்டு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் தொடரும் பாதாளச் சாக்கடைப் பள்ளங்கள்

குமரியில் குளத்தை சுத்தம் செய்த நாம் தமிழர் கட்சியினர்!

இச்சூழலில் கீழநாஞ்சில்நாட்டில் பம்பிங் நிலையத்திற்குச் செல்லும் குழாய் உடைந்து 20 அடி ஆழம் வரை மண் உள்வாங்கி இருப்பதால், அருகிலுள்ள வீடுகள் சேதம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் தொடரும் சாலைப் பள்ளங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details