மயிலாடுதுறை: வில்லியநல்லூர் ஊராட்சியில் உள்ள பாலாக்குடி - பன்னீர்வெளி சாலையானது, மயிலாடுதுறை - மணல்மேடு செல்லும் சாலையிலிருந்து பிரிந்து மேலாநல்லூர் வரை செல்கிறது.
இந்தச் சாலை 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்குப் பிரதான இணைப்பாக உள்ளதால், இதில் அரசு நகரப்பேருந்து சென்றுவருகிறது. மேலும் இந்தச் சாலையை ஒட்டி, 2 ஏக்கர் நிலத்திற்கும் அதிகமான அளவு கொண்ட பாலாக்குடி பிள்ளையார் கோயில்குளம் உள்ளது.
உடைந்த பாலம்
இக்குளத்திற்கும் பாலாக்குடி வாய்க்காலுக்கும் இடையே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த குளத்தைத் தூர்வாரியுள்ளனர். அப்போது 15 அடி ஆழம்வரை தோண்டி இக்குளத்தில் மண் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 நாட்களுக்குமுன் மணல்மேடு பகுதியில் பெய்த மழை நீரும், முன்பே திறக்கப்பட்டு பாலாக்குடி வாய்க்காலில் விடப்பட்ட நீரும், குளத்திற்குள் பாய்ந்துள்ளது.