நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமத்தில் அண்ணன், தம்பிக்கிடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட மோதலில் தம்பி செந்திலை அவரது அண்ணனான ரவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.சண்டையை தடுக்க முயன்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஒரு இளைஞருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை ரவியை கைது செய்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வேதாரண்யம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சபியுல்லா பாதிக்கபட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.