தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மதுபானக்கடையில் தகராறு : இருவர் காயம் - டாஸ்மாக்கில் தகராறு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுக்கடையில் நிகழ்ந்த தகராறில் இருவருக்கு மண்டை உடைந்தது.

டாஸ்மாக்கில் தகராறு : மதுப்பிரியர்கள் சண்டையில் இருவருக்கு மண்டை உடைப்பு
டாஸ்மாக்கில் தகராறு : மதுப்பிரியர்கள் சண்டையில் இருவருக்கு மண்டை உடைப்பு

By

Published : Dec 20, 2021, 9:28 AM IST

மயிலாடுதுறை: பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட குமாரமங்கலம் காவல் சோதனைச் சாவடி அருகே உள்ள டாஸ்மாக் அரசு மதுபானக்கடையில் மங்கைநல்லூர் கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன்(31) மது அருந்த சென்றுள்ளார். அங்கு அவருக்கும், மாப்படுகையை சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மண்டை உடைப்பு

அப்போது அங்கு வந்த ராஜாராமனின் தம்பி அருண்பாண்டியன் சமாதானம் பேசி விலக்கி விட்டுள்ளார். இருவருக்கும் மீண்டும் சண்டை வரவே கீழே கிடந்த பாட்டிலால் அருண்பாண்டியன் மற்றும் ராஜாராமனை விஜய் தாக்கியுள்ளார். இதில், அருண்பாண்டியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தகவலறிந்து திரண்ட அருண்பாண்டியனின் நண்பர்கள் விஜய்யை துரத்திச் சென்றனர்.

அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அருகே உள்ள குமாரமங்கலம் சோதனைச் சாவடியில் விஜய் தஞ்சமடைந்தார். ஆனால் விடாமல் அங்கும் துரத்திச்சென்ற அருண்பாண்டியன் தரப்பினர் விஜய்யை வெளியில் விடக்கோரி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக்கில் தகராறு : மதுப்பிரியர்கள் சண்டையில் இருவருக்கு மண்டை உடைப்பு

அப்போது அங்கு வந்த பெரம்பூர் காவலர்கள் விஜய்யை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, காவலர்களின் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் வாக்குவாதம்

தொடர்ந்து காவலர்கள்,அருண்பாண்டியன் அவரது அண்ணன் ராஜாராமன் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வந்தவர்கள் தங்களை உள்நோயாளியாக மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் கூறி மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த காவலர்கள் இருவரையும் சமாதானம் பேசி சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதித்தனர். இது குறித்து பெரம்பலூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Doctor MGR University convocation:பட்டம் பெறும் 12ஆயிரத்து 814 பேர்

ABOUT THE AUTHOR

...view details