தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ட்ரோன் மூலம் காவிரிப் படுகை ஆய்வு! - drone view shooted in cauvery river beds by pwd

நாகப்பட்டினம்: சிறிய ரக ஆளில்லா விமானம் மூலம், காவிரிப் படுகையில் உள்ள பாசனப் பகுதிகளில் பொதுப்பணித் துறை அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆளில்லா விமானம் மூலம் காவிரி படுகை ஆய்வு

By

Published : Aug 22, 2019, 7:51 AM IST

மழை, வெள்ளம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கும் பகுதியாக நாகை மாவட்டம் விளங்குகிறது. அதிக மழைப்பொழியும் காலங்களில் ஆறுகளில் தண்ணீர் அதிகளவு சென்று, பல இடங்களில் உடைப்பு ஏற்படுகின்றது. இதனால், விளைநிலங்கள், குடியிருப்புகள் நீரில் மூழ்கி, பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே காவிரி வடிநிலப்பகுதி, ஆற்றுப் பகுதி, தாழ்வான பகுதி, சேதமடையும் பகுதிகளை ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாகக் குத்தாலம், தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில், மகிமலையாறு, கடலாழி, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வுப்பணி நடைபெற்றது. இன்றும் இந்தப் பணிகள் தொடரும் என்றும், பாதிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

டிரோன் மூலம் காவிரி படுகை ஆய்வு

ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் பணியினை, நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப்குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும், குடிமராமத்து பணிகளைப் பார்வையிட்ட அவர், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதற்குள் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details