தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் திருட்டில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது - குற்றச் செய்திகள்

தரங்கம்பாடி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட திமுக பிரமுகரின் புதிய டிராக்டர் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஓட்டுநரை பொறையார் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் திருட்டில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது
மணல் திருட்டில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது

By

Published : Aug 1, 2021, 7:20 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா ஆயப்பாடி அருகே உள்ள நண்டலாறு ஆற்றில், மணல் திருட்டு நடப்பதாக பொறையார் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் பொறையார் காவல் ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட சிலர் காவலர்களை கண்டதும் தப்பியோடினர்.

விசாரணை

மேலும், அனுமதியின்றி மணல் எடுத்த பதிவெண் இல்லாத புதிய டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்து, காராம்பள்ளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல் என்பவரை கைதுசெய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மணல் திருட்டில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது

விசாரணையில் காராம்பள்ளத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் தேவதாஸ் என்பவருடைய வாகனம் அது என தெரியவந்தது. மேலும், தப்பியோடிய மணல் கொள்ளையர்களையும் காவலர்கள் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'சிகிச்சைக்கு வந்த இடத்தில் ஹேண்ட்பேகை தவறவிட்ட வெளிநாட்டுப் பெண்!'

ABOUT THE AUTHOR

...view details