தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடுமையான வறட்சி நேரத்தில் வீணாகும் தண்ணீர்!

நாகை: மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பாசன வாய்க்காலில் நீர் வழிந்து ஓடுவதை சரிசெய்யக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By

Published : Jun 27, 2019, 1:46 PM IST

வறட்சி

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் குழாய்கள் வழியாக மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருவதால் தினந்தோறும் 29 ஆயிரம் லிட்டர் நீர் எடுப்பதற்கு பதில், 19ஆயிரம் லிட்டர் மட்டுமே நீர் கிடைக்கிறது.

வீணாகும் தண்ணீர்

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நிலையில், கடுவன்குடி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக பாசன வாய்க்காலில் வழிந்தோடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குடிநீர் வீணாவது குறித்து தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக உடைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details