தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2020, 2:18 PM IST

ETV Bharat / state

ராட்சத குழாய் உடைப்பு - உப்புநீரில் கலக்கும் குடிநீர்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணிக்கு அனுப்பப்படும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.

இராட்சத குடிநீர் குழாய் உடைப்பு
இராட்சத குடிநீர் குழாய் உடைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு ராட்சத குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் அனுப்பப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேளாங்கண்ணி அடுத்த பாப்பாகோவில் கடுவையாற்றின் குறுக்கே செல்லும் ராட்சத குழாயில், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடி தண்ணீர் வீணாக உப்புநீர் ஆற்றில் கலக்கிறது.

ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு

அதேசமயம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை உடைப்பினை சரிசெய்ய அலுவலர்கள், முன்வராத காரணத்தினால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக உப்புத்தன்மை கொண்ட ஆற்றுநீரோடு கலந்து பயனற்றதாகப் போகிறது.

மேலும் இது கோடை காலம் என்பதால், தண்ணீரின் பற்றாக்குறை நிலவும் இந்தச் சூழலில் இவ்வாறு குடிநீர் வீணாவது பொதுமக்கள் இடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அலுவலர்கள் அவசர கால நடவடிக்கையாக கவனத்தில் கொண்டு, உடனடியாக உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வெயில் காலத்தில் வெளுத்து வாங்கிய மழை

ABOUT THE AUTHOR

...view details