தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரட்டாசி எதிரொலி - கருவாடு விற்பனையும் மந்தம்! - puratasi month news

நாகப்பட்டினம்: இறைச்சியை போலவே கருவாடு விற்பனையும் புரட்டாசி மாதத்தினால் மந்தமடைந்துள்ளதாக நாகை மாவட்ட கருவாடு வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

naagai

By

Published : Oct 7, 2019, 9:46 PM IST

நாகை மாவட்டத்தில் மீன் விற்பனை போலவே, கருவாடு விற்பனையும் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இம்மாதம் புரட்டாசி என்பதால், ஏற்கனவே ஆட்டுக்கறி, கோழிக்கறி உள்ளிட்ட இறைச்சி வியாபாரம் வெகுவாக மந்தமடைந்துள்ளது.

இறைச்சி வியாபாரிகள் இம்மாதம் நட்ஷத்தை அடைந்து வரும் நிலையில், தற்போது கருவாடு வியாபாரமும் பாதிப்படைந்துள்ளது. பொதுவாக கருவாடு வகைகளை மக்கள் இறைச்சியை போல அதே நாளில் வாங்க மாட்டார்கள்.

ஒரு முறை கருவாடை வாங்கிவைத்துவிட்டு, வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ பயன்படுத்துவார்கள். இவ்வாறு, மாதத்தில் சிலமுறை மட்டுமே வாங்கப்பட்டு வரும் கருவாடு, இப்போது முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

அதன்படி, நகையில் உள்ள பாரதி மார்கெட், பறவை மார்கெட், வேளாங்கண்ணி மார்கெட், நாகூர் மார்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீன், கருவாடு விற்பனை தொய்வடைந்து, வாங்கிச் செல்ல மக்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி, கருவாடு வியாபாரிகள் மிகுத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கருவாடு விற்பனையும் மந்தம்

இதையும் படிங்க:

ஒரு கிலோ ஆட்டுக்கறிக்கு ஒரு கிராம் வெள்ளி - புரட்டாசியை சமாளிக்க வியாபாரியின் புதுயுக்தி

ABOUT THE AUTHOR

...view details