நாகை : கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் நாடக கலைஞர் வ.உ.சி வேடமணிந்து ஜோதி பவுண்டேஷன் என்ற சேவை அமைப்பினர் பொதுமக்கள், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பனை விதைகளை வழங்கினர்.
தொடர்ந்து காவிரி ஆற்றுப்படுகை ஓரம் 150 பனை விதைகளை நட்டு வைத்தனர். மேலும், தேசத் தலைவர்களின் பெருமைகளை மறந்துவரும் இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் வ.உ.சிதம்பரனாரின் நூல்கள் அரசு நூலாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மேலும், அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து பள்ளிக்கல்வித் துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டுமென்று அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடகக் கலைஞர்கள் கோரிக்கை இந்த அறிவிப்பு, தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், வஉசி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை நாட்டுப்புற நாடகக் கலைஞர்களுக்கு வழங்க வேண்டும், பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று நடித்துக் காண்பிக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று நாடகக் கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : சாவித்திரி பாய் புலே பிறந்த தினத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட கோரிக்கை!