மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு (40). வேளாண்மை கூலித் தொழிலாளியான இவருக்கும், குத்தகைவெளி கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் மகள் புனிதா (35) என்பவருக்கும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
வரதட்சணை கொடுமை
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் புனிதாவிடம் கணவர் சோமு, மாமியார் இந்திராணி ஆகியோர் வரதட்சணை கேட்டும், நடத்தையில் சந்தேகப்பட்டும் அடிக்கடி, அடித்து துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் புனிதா குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால், தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்பு சோமுவின் சகோதரர் ரமேஷ், புனிதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார்.