தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வையாளர்களைக் கவர்ந்த நாய்கள் கண்காட்சி! - nagai district

நாகை: கோடை விழாவையொட்டி நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நாய்கள் கண்காட்சி

By

Published : Jun 23, 2019, 8:49 AM IST

நாகை புதிய கடற்கரையில் கோடை விழா, நெய்தல் விழா என்ற பெயரில் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், இரண்டாவது நாளான நேற்று (சனிக்கிழமை), கால்நடைத் துறை சார்பாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நாய்கள் கண்காட்சி

கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், சைபீரியன், ராஜபாளையம், நாட்டு நாய்கள் என 10-க்கும் மேற்பட்ட ரக நாய்கள் கலந்துகொண்டன. கால்நடைத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற கண்காட்சியில் நாய்களின் அடிப்படைத் தகுதியான உடல் கட்டமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

வினித்

திருடனை எப்படிப் பிடிப்பது, கைகொடுப்பது, பாயும் திறன் போன்ற செல்லப் பிராணிகளின் சுட்டி செயல்களைப் பெரியவர்களும், குழந்தைகளும் கண்டு வியந்தனர். இறுதியாக, அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்வு செய்யப்பட்ட பிறந்து நான்கு மாதமே ஆன நாகையைச் சேர்ந்த வினித் என்பவரது மகாலட்சுமி என்ற ரேட் வில்லர் ரக நாய் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டபோது

இதேபோல, மாவட்ட காவல் துறை சார்பில் நடைபெற்ற மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details