மயிலாடுதுறை: தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 3ஆயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரிக்குச் செல்லும் சாலை மற்றும் கல்லூரி வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.
இந்நிலையில் இன்று கல்லூரிக்கு சென்ற மாணவிகளை கல்லூரி நுழைவு வாயில் அருகே சுற்றித்திரிந்த ஒரு நாய் துரத்தி துரத்தி கடித்தது. இதில் மாணவிகள் அலறியடித்து ஓடினர். நான்கு மாணவிகளை நாய் கடித்ததில் மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நாய் கடியால் பாதிக்கப்பட்ட சுபானா மற்றும் ஜெயந்தி ஆகிய இரண்டு மாணவிகள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாணவிகள் சிகிச்சைப் பெற்று கல்லூரிக்குச் சென்றனர்.
மயிலாடுதுறை நகரில் தெரு நாய்கள் அதிகரித்து உள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடித்த நாய் ரேபிஸ் நோய் தாக்கிய வெறிநாயா? என்பது பற்றி விசாரணை செய்து உரிய மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும் என்று மாணவிகள் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:KFC-ல் இருந்து வேக வைக்காத சிக்கனை டெலிவிரி செய்த ஸ்விக்கி... வாடிக்கையாளர் ட்விட்டரில் புகார்...